ஸ்டெர்லைட் வழக்கு: தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்!

  முத்துமாரி   | Last Modified : 23 Aug, 2018 12:45 pm
sc-rejects-tn-govt-s-plea-in-sterlite-case

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பொது மக்களில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, தமிழகம் முழுவதும் நடந்த போராட்டங்களின் எதிரொலியாக, ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

இதையடுத்து,  "ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் நாட்டிற்கு ரூ.20 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. நாங்கள் மக்களுக்கு பாதிப்பு ஏற்படா வண்ணம் ஆலையை இயக்குகிறோம். ஆலையில் நிர்வாக பணிகள் தேங்கிக்கிடக்கின்றன. ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குதல், வரி செலுத்துதல் உள்ளிட்ட வேலைகள் முடிக்க வேண்டும்" என ஸ்டெர்லைட் நிர்வாகம் தரப்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஒரு மனு அளிக்கப்பட்டது. 

இந்த வழக்கை விசாரணை செய்த தேசிய பசுமை தீர்ப்பாயம், முழுவதுமாக  ஆலையை இயக்க அனுமதிக்க முடியாது. வேண்டுமென்றால் நிர்வாக பணிகளுக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கொடுக்கிறோம்" என்று கூறி அதற்கு மட்டும் அனுமதி வழங்கியுள்ளது. 

தீர்ப்பாயத்தின் அனுமதிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த தமிழக அரசின் மனு இன்று விசாரணைக்கு வந்தது.  ஸ்டெர்லைட் ஆலைக்குள் நிர்வாகத்தினர் அனுமதிக்கப்படுவதன் மூலம் பெரும் பிரச்னை உருவாக வாய்ப்புள்ளது என தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. அதே நேரத்தில் ஸ்டெர்லைட் நிர்வாக தரப்பு தங்களது வாதத்தை பதிவு செய்தது. இறுதியில் தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. நிர்வாகப் பணிகளுக்காக ஸ்டெர்லைட் ஆலைக்குள் செல்லலாம் என்று கூறிய தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடையில்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close