ரிடயர்ட் அரசு  ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு!!

  சுஜாதா   | Last Modified : 18 Aug, 2018 07:41 am
wage-increases-for-retired-government-employees

2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதிக்கு முன்பு  ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தில் 3 சதவீத ஊதிய உயர்வு வழங்கபடும் என கூறப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை செயலாளர் சொர்ணா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-

"அரசு ஊழியர்கள் ஓய்வுபெற்ற மறுநாள் ஊதிய உயர்வுக்கான நாளாக இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு சம்பளத்தில் 3 சதவீத உயர்வை வழங்கலாம் என்று 2014-ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. 2014 டிசம்பர் 31-ந்தேதி முதல் இந்த சலுகை அமலுக்கு வருவதாக கூறப்பட்டிருந்தது.

தற்போது இந்த சலுகை 2014 டிசம்பர் 31-ந்தேதிக்கு முன்பு ஓய்வுபெற்றவர்களுக்கும் பொருந்தும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சலுகையை மாநிலம் முழுவதும் உள்ள ஓய்வுபெற்ற ஊழியர்கள் அனைவருக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வழங்க வேண்டும்."  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close