கேரள மக்களை நெகிழ வைத்த விஜய் ரசிகர்கள்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 21 Aug, 2018 05:39 am
kerala-people-shocked-by-vijay-fans-gesture

கடந்த சில வாரங்களாக பெய்து வரும் வரலாறு காணாத பெருமழை கேரளாவை சின்னாபின்னமாக்கி வருகிறது. 

மாநிலம் முழுவதும் உள்ள அணைகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி உள்ளது. இந்த மழை தொடர்ந்து நீடித்து வருவதால் கேரளாவில் நிலச்சரிவு, வீடுகள் இடிவது, உயிரிழப்புகள் நீடித்து வருகின்றன. இதுவரை  400க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் நடந்துள்ளன. 
2 லட்சத்திற்கும் அதிமகான மக்கள் 1500க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பல்வேறு மாநிலத்தவர்களும் தேவையான நிவாரணப் பொருட்களையும், மீட்டெடுக்கும் பணிகளுக்கு பண உதவிகளையும் வழங்கி வருகின்றனர்.

தமிழகத்தில் பலரும் உதவி செய்து வருகின்றனர். நடிகர் சிவகார்த்திகேயன், சூர்யா, விஜய் சேதுபதி, நயன்தாரா, ரஜினி காந்த் உள்ளிட்டோர் லட்சக்கணக்கில் பண உதவிகளை செய்துள்ளனர். இந்நிலையில் அதிகபட்சமாக நடிகர் விக்ரம் 35 லட்சம் ரூபாயை வெள்ள நிவாரணத்திற்காக அளித்துள்ளார். இந்நிலையில் தமிழகத்தின் மனம் கவர்ந்த நாயகர்களாக கடுதப்படும் விஜயும், அஜித்தும் பண உதவிகளை இதுவரை அறிவிக்கவில்லை என கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில், அவர்கள் இருவரது ரசிகர்களும் தங்களால் இயன்ற உதவிகளை கேரள மக்களுக்காக செய்து வருகின்றனர். தற்போது திண்டுக்கல் மாவட்டம், ரவுண்டுரோடு, அபிராமி நகரைச் சேர்ந்த விஜய் ரகிச்கான வினோத் கேரள மக்களுக்கு உதவி செய்துள்ளார்.  விஜய் மக்கள் இயக்கம் சார்பாக சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான அரிசி, பருப்பு, கைலி, துண்டு, நைட்டி, மற்றும் சிறுவர்களுக்கான பால்பவுடர்கள், பிஸ்கட் உட்பட நிவாரண பொருட்களை வேன்கள் மூலம் எடுத்துச்சென்று கேரளா மாநிலத்தில் உள்ள பாலக்காடு மற்றும் அதன் அருகில் உள்ள கச்சிகட்டி கிராமப்பகுதிகளுக்கு சென்று வழங்கினார்.

நிவாரண பொருட்களை பெற்றுக்கொண்ட கேரள மக்கள் விஜய் மக்கள் இயக்கத்தினருக்கும், அவரது  ரசிகர்களுக்கும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். அதே போல் கேரளாவைச் சேர்ந்த விஜய் ரசிகர்களும் தங்களால் முயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். 
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Loading...
Advertisement:
[X] Close