வருகிற 26ம் தேதி முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

  முத்துமாரி   | Last Modified : 22 Aug, 2018 01:30 pm
heavy-rainfall-may-be-happened-in-tn-from-aug-26

வெப்பச்சலனம் காரணமாக வருகிற 26ம் தேதி முதல் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் கே.பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளிகையில், "அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வருகிற 26ம் தேதி முதல் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவில் லேசான மழை பெய்யலாம். கடந்த 24 மணி நேரத்தில் கோவை சின்னக்கல்லார் மற்றும் வால்பாறையில் தலா 2 செ.மீ மழை பெய்துள்ளது" என தெரிவித்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close