தண்ணீர் தேசத்தின் கண்ணீர் துடைப்போம் வாருங்கள்!

  Newstm Desk   | Last Modified : 22 Aug, 2018 04:59 pm
join-with-us-for-kerala-flood-relief

"நாங்கள் உடுத்திய துணியோடு இந்த நிவாரண முகாமை வந்தடைந்தோம். எங்கள் வீடு முழுவதும் மூழ்கிவிட்டது. உயிரை மட்டும் கையில் பிடித்துக் கொண்டு படகேறி இங்கு வந்து சேர்ந்தோம். நாங்கள் உயிருடன் இருப்பதே எங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கிறது"  என்று குட்டநாடு பகுதியில் வாழும் கேரள மக்கள் கூறுவதைக் கேட்கும்போது மனசு வலிக்கிறது.

கடவுளின் சொர்க்கபூமியாக இருந்த கேரள மண்ணை மழை - வெள்ள பாதிப்பு செல்லரித்து விட்டது. இருக்க வீடு, உண்ண உணவு, உடுத்த உடை என்று கவலையே இல்லாமல் சென்று கொண்டிருந்த பல லட்சம் கேரள மக்களின் வாழ்க்கையில் திடீரென்று ஒன்றுமேயில்லை என்ற நிலை உருவாகியுள்ளதை பார்க்கும் போது மனம் பதறுகிறது.

அயராது உழைத்து சிறுகச் சிறுக சேமித்த பணத்தில் கட்டிய அழகழகான வீடுகள் தண்ணீரில் மூழுகுவதை காணும்போது நம் கண்கள் கண்ணீரில் மூழ்குகிறது. சிறு குழந்தை முதல் பெரிய நாடுகள் வரை அனைவரும் தங்கள் உதவிக்கரத்தை கேரள மக்களுக்கு நீட்டி வருகின்றனர். தமிழகத்தில் உள்ள பல்வேறு அமைப்புகளும், தன்னார்வலர்களும் கேரள மக்களுக்கு நேரடியாக நிவாரண உதவிகள் வழங்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

'கேரளம் காப்போம்' என்ற கருப்பொருளுடன் களப்பணியாற்றும் துவக்கம், சென்னை ப்ரஸ் க்ளப், மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் ஒர்க் மற்றும் சி.என்.எஸ்.ஐ. ஆகியோருடன் நியூஸ் டிஎம் இணைந்து கேரள வெள்ள நிவாரண உதவிப் பணிகளில் கரம் கோர்ப்பதில் நிறைவு கொள்கிறது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் ரூ.3 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களும், ரூ.3.5 லட்சம் மதிப்பிலான நிவாரண நிதியும் திரட்டப்பட்டுள்ளது.

இதனிடையே, கேரளத்தில் போக்குவரத்து தொடர்புகள் முற்றிலும் பாதிக்கப்பட்ட உள்புற கிராமப் பகுதிகள் குறித்த விவரமும் கேட்டறியப்பட்டு வருகிறது. நிவாரண உதவிகள் இதுவரை முழுமையாக சென்றடையாத பகுதிகளுக்கு நேரடியாக உதவிகளை அளிக்கும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிவாரணப் பொருட்களுடன் தன்னார்வலர்களும் நேரடிக் களப் பணிக்காக வரும் ஞாயிற்றுக்கிழமை கேரளா புறப்படுகின்றனர். அதுவரை நம் வாசகர்களும் இந்த பேரன்பைப் பகிரும் நிவாணர உதவி முயற்சியில் தங்களை இணைத்துக்கொள்ளலாம். தொடர்புக்கு:

Donations/funds:
Thuvakkam Welfare Association,
SBI, Mylapore.
A/c No. 34739892385
IFSC: SBIN0000965

> For more details contact: Joseph Alex - 9994535756 | Vasudevan - 8939693959

> For various collection centre in chennai, Contact: Siraj - 7845590790

நிவாரணப் பணியின் கள நிலவரங்களை உடனுக்குடன் அறிய > https://www.facebook.com/thuvakkam

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close