பெசன்ட் நகர் கடற்கரை உட்பட தமிழகத்தில் 6 இடங்களில் வாஜ்பாய் அஸ்தி கரைப்பு

  Newstm Desk   | Last Modified : 26 Aug, 2018 11:59 am
former-pm-vajpayee-s-ash-immersed-in-tamilnadu

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி இன்று சென்னை பெசன்ட் நகர் கடற்கரை உட்பட 6 இடங்களில் உரிய சடங்குகள் செய்யப்பட்டு கரைக்கப்பட்டது.

பா.ஜ.க மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய் கடந்த 22ம் தேதி டெல்லியில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது அஸ்தி பா.ஜ.க மாநில தலைவர்களிடம் பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க தலைவர் அமித்ஷா ஆகியோர் டெல்லியில் வழங்கினர். 

தமிழகத்தில் இருந்து மாநில தலைவர் தமிழிசை டெல்லி சென்று அஸ்தியை பெற்றுக்கொண்டார். தமிழக பா.ஜ.க. அலுவலகமான கமலாலயத்தில் வைக்கப்பட்ட வாஜ்பாய் அஸ்திக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் வாஜ்பாய் அஸ்தி இன்று காலை 10.30 மணிக்கு தமிழகத்தில் 6 இடங்களில்  கரைக்கப்பட்டது. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் அஸ்தியானது சென்னை பெசன்ட்நகரில் அஷ்டலட்சுமி கோவில் அருகில் கடலில் கரைக்கப்பட்டது.

இதேபோல் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் கன்னியாகுமரியில் முக்கடல்களும் சங்கமிக்கும் இடத்தில் அஸ்தி கரைக்கப்பட்டது. முன்னாள் எம்.பி. இல.கணேசன் தலைமையில் திருச்சி ஸ்ரீரங்கம் முக்கூடலிலும், தேசிய செயலாளர் எச்.ராஜா தலைமையில் ராமேசுவரம் கடலில் கரைக்கப்பட்டது. 

மத்திய கயிறு வாரியத்தின் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமையில் வாஜ்பாய் அஸ்தியானது பவானி முக்கூடலில் கரைக்கப்பட்டது. கே.என்.லட்சுமணன் மற்றும் எம்.ஆர்.காந்தி தலைமையில் மதுரை வைகை ஆற்றில் கரைக்கப்பட்டது.இதில் ஏராளமான பா.ஜ.க தொண்டர்கள் கலந்து கொண்டனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close