தமிழகமே! கடைசி இதயதுடிப்பு வரை... உனக்காக போராடுவேன்: ஸ்டாலின் ட்வீட்

  Newstm Desk   | Last Modified : 28 Aug, 2018 02:03 pm
m-k-stalin-s-first-tweet-after-becoming-dmk-chief

தி.மு.க தலைவராக பொறுப்பேற்ற பிறகு, கடைசி இதயதுடிப்பு வரை தமிழகத்திற்காக உழைப்பேன் என மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

அண்ணா அறிவாலயத்தில் இன்று நடந்த தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கட்சியின் தலைவராக பதிவியேற்றார். இதனையடுத்து அவரது ட்விட்டர் பக்கத்திலும் தி.மு.கவின் தலைவர் என முகப்பு பக்க தகவல் மாற்றப்பட்டுள்ளது. 

 

 

தலைவரான பிறகு பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின், "திராவிட முன்னேற்றக் கழகத்தின் இதயமாம் பொதுக்குழுவில், கழகத்தின் தலைவராய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன்! தமிழர்களையும், தமிழினத்தையும் போற்றிப் பாதுகாத்த - தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோரின் வழியில் என்றைக்கும் பயணிப்பேன் என உறுதியேற்கிறேன்!" என பதிவிட்டுள்ளார்

மேலும், "என் உயிரினும் மேலான தமிழினமே! என் கடைசி மூச்சு உள்ளவரை... என் கடைசி இதயத் துடிப்புவரை... உனக்காக உழைத்திடுவேன்! உனக்காக போராடுவேன்! இனம், மொழி, நாடு, கழகம் இந்த நான்கையும் எப்போதும் காப்பேன்!" என்று பதிவிட்டுள்ளார். 

பின்னர் மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அவருடன் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் சென்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close