கருணாநிதி நினைவேந்தலில் நடந்தது அநாகரிகமானது: தமிழிசை

  Newstm Desk   | Last Modified : 31 Aug, 2018 02:20 pm
tamilisai-soundararajan-tweet-about-karunanidhi-tribute-meet

நிதின் கட்கரி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பா.ஜ.கவை எதிர்த்து பேசியது அநாகரிகமான செயல் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், நிதின் கட்கரி முன்னிலையிலேயே பாரதிய ஜனதா கட்சியை கடுமையாக விமர்சித்து பேசினர். 

இதுகுறித்து தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், "ஸ்டாலின் தலைவரான பின் தன் ஏற்புரையில் பா.ஜ.க எதிர்ப்பை கடுஞ்சொற்களால் பேசிய நிலையிலும் தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியான கலைஞருக்கு மரியாதை செலுத்த பா.ஜ.க மூத்ததலைவர். நிதின்கட்கரி கலந்துகொண்டது அரசியல் நாகரிகம். ஆனால், அதேகூட்டத்தில் மற்றவர்கள் கலைஞரை மறந்து பா.ஜ.கவை விமர்சித்தது அநாகரிகம்" என பதிவிட்டுள்ளார். 

மேலும் இன்று காலை பேட்டியளித்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், "நேற்று நடந்தது நினைவஞ்சலி கூட்டம் அல்ல, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் கூட்டம்" என்று கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close