முல்லை வேந்தன், கருப்பசாமி பாண்டியன் தி.மு.கவில் இணைந்தனர்!

  Newstm Desk   | Last Modified : 31 Aug, 2018 04:55 pm
mullai-venthan-karuppasamy-pandian-are-joined-with-dmk

முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன், தென்காசி தொகுதி முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ கருப்பசாமி பாண்டியன் ஆகிய இருவரும்  இன்று ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தனர். 

திமு.கவின் தருமபுரி மாவட்ட செயலாளராகவும், முன்னாள் அமைச்சராகவும் பதவி வகித்தவர் முல்லை வேந்தன். தொடர்ந்து திமுகவில் இருந்து அ.தி.மு.கவிற்கு தாவினார். பின்னர் மீண்டும் தி.மு.கவில் சேர்ந்தார். கடந்த 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது கட்சியின் வெற்றிக்கு எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்று கூறி முல்லை வேந்தன், பழனிமாணிக்கம், இன்பசேகர் ஆகிய மூவரையும் சஸ்பெண்ட் செய்து கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் உத்தரவிட்டார். முல்லை வேந்தன் தவிர மற்ற இருவரும் இது தொடர்பாக விளக்கமளித்து கட்சியில் சேர்ந்து கொண்டனர். முல்லை வேந்தன் விளக்கம் எதுவும் அளிக்காததால் கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். இந்நிலையில் ஸ்டாலினின் அழைப்பை ஏற்று அவர் தி.மு.கவில் இணைந்தார். 

அதேபோன்று கருப்பசாமி பாண்டியன் நெல்லை மாவட்டம் தென்காசி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ ஆவார். அ.தி.மு.கவில் இருந்து தி.மு.கவுக்கு மாறினார். தி.மு.கவில் இரண்டு முறை எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஸ்டாலினுக்கு ஆதரவாக அவர் பலமுறை கட்சித் தலைமையிடம் பேசியுள்ளார். பின்னர் தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்டு, அ.தி.மு.கவில் சேர்க்கப்பட்டார். கடைசி வரை அதிமுகவில் இருப்பேன் என்று கூறிய அவர் தற்போது தி.மு.க தலைவராக ஸ்டாலின் ஆனதையடுத்து, தி.மு.கவில் இணைந்துள்ளார். 

முல்லைவேந்தன் மற்றும் கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்த சமயத்தில்,  ஸ்டாலினுடன் தி.மு.க பொருளாளர் துரைமுருகன், வி.பி.துரைசாமி, ஆ.ராசா, எ.வ.வேலு உள்ளிட்டோர் இருந்தனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close