எடப்பாடி அரசு கோமாவில் உள்ளது: முக்கொம்பில் ஆய்வு செய்த பின் மு.க.ஸ்டாலின் பேட்டி

  Newstm Desk   | Last Modified : 03 Sep, 2018 01:33 pm
edapadi-government-is-in-como-m-k-stalin

எடப்பாடி அரசு கோமாவில் உள்ளது என முக்கொம்பில் ஆய்வு செய்த பின் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்தார். 

திருச்சி முக்கொம்பு அணையில் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து இன்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது அவருடன் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் திருச்சி சிவா எம்.பி ஆகியோர் இருந்தனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், "முக்கொம்பு அணையை ஆய்வு செய்யாமலேயே அதிகமான அளவில் தண்ணீர் திறக்கப்பட்டதால் தான் மதகு உடைந்துள்ளது. முன் கூட்டியே முக்கொம்பு கதவணையை ஆய்வு செய்து துரிதமாக செயல்பட்டு இருந்தால் இந்த பிரச்னை நிகழ்ந்திருக்காது. 

உடைந்த மதகுகள் 4 நாட்களில் சீர் செய்யப்படும் என்று 24ம் தேதி முதல்வர் கூறினார். எடப்பாடி அரசு கோமாவில் உள்ளது. தற்போது 40 சதவீதம் மட்டுமே சீரமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. அணையில் மதகுகள் உடைந்ததற்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலக வேண்டும். அ.தி.மு.க அரசு கமிஷனை தான் தூர்வாரிக்கொண்டு இருக்கிறது. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு 40 நாட்கள் ஆகியும் இதுவரை கடைமடை பகுதிக்கு தண்ணீர் சென்றடையவில்லை" என்று கூறினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close