மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது: உயர்நீதிமன்றம்

  Newstm Desk   | Last Modified : 03 Sep, 2018 11:36 am
cant-allow-permission-for-protest-in-marina-high-court

மெரினாவில் போராட்டம் நடத்த தனி நீதிபதி அளித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது. 

காவிரி நதிநீரை பெற விவசாய சங்கம் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. டெல்லி ஜந்தர் மந்தரில் அவர்கள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து சென்னை மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாகண்ணு உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவர் ஒரு மாத காலம் மெரினாவில் உண்ணாவிரதம் போராட்டம் நடத்த அனுமதி கேட்டிருந்தார். 

இதனை விசாரித்த தனி நீதிபதி ராஜா, "ஒரு மாதக்காலத்திற்கு அனுமதி அளிக்க முடியாது. ஒருநாள் போராட்டம் நடத்தலாம். ஆனால் சட்ட ஒழுங்கை கெடுக்காமல், அரை நிர்வாணம் போன்றவற்றை செய்யாமல் போராட்டம் நடத்த வேண்டும்" என்றார். 

நீதிபதியின் இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அதனை அவசர வழக்காக விசாரித்த நீதிபதி சுதர்சன் தலைமையிலான அமர்வு, அன்று மாலையே நீதிபதி ராஜா வழங்கிய உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. மேலும் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பானது ஒத்திவைக்கப்பட்டது. 

இந்த வழக்கில் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், போராட்டம் நடத்த மெரினா அருகிலேயே பல இடங்கள் உள்ளன. மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி அளிக்க முடியாது. போராட்டத்தால் சட்ட ஒழுங்கு பாதிப்பு ஏற்படும். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடந்த போது, இறுதியில் சட்ட ஒழுங்கு பாதிக்கப்பட்டது" என்று நீதிபதிகள் கூறினர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close