தமிழகத்தில் காவி புரட்சி வெடிக்கும்: தமிழிசை அதிரடி பேச்சு!

  Newstm Desk   | Last Modified : 03 Sep, 2018 12:48 pm
tamilisai-soundararajan-speech-at-chennai-valluvar-kottam-event

இந்துக்கள் மீது சிறு தூசி பட்டாலும், தமிழகத்தில் காவி புரட்சி வெடிக்கும் என தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் சொத்து குறித்த கடந்த பிப்ரவரி 12ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உடனடியாக அமல்படுத்தக்கோரி, நேற்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே பா.ஜ.க சார்பில் நடைபெற்ற அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில், பா.ஜ.க தேசியச் செயலர் எச்.ராஜா, தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பா.ஜ.க பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழிசை. "காவியை பார்த்து திராவிட கட்சிகள் பயப்படுகின்றன. ஆவியை பார்த்து பயப்படும் திராவிட கட்சிகள் காவியை கட்டுப்படுத்த முடியாது. ஏனென்றால், தமிழகம் ஏற்கனவே காவி மயமாகிவிட்டது. இந்துக்கள் மீது சிறு தூசி பட்டாலும் தமிழகத்தில் காவி புரட்சி வெடிக்கும்

நாம் கும்பிடுவது சாமி சிலைகள் தானா? அல்லது ஆசாமிகளால் வைக்கப்பட்ட போலி சிலைகளா? என பக்தர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். அறங்காவலர்கள் எதற்கு காவலர்களாக இருக்கிறார்கள் என தெரியவில்லை" என்று பேசினார். தமிழிசையின் இந்த பேச்சுக்கு 
நெட்டிசன்கள் பலரும் மீம்ஸ்களுடன் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் சொத்து குறித்து கடந்த பிப்ரவரி 12-ம் தேதி உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த கோரி இந்து ஆலயங்கள் மீட்பு இயக்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close