பா.ஜ.கவுக்கு எதிராக கோஷமிட்ட சோபியாவுக்கு ஜாமீன்!

  Newstm Desk   | Last Modified : 04 Sep, 2018 01:17 pm
sophia-who-raised-anti-bjp-slogans-got-bail

தூத்துக்குடி விமானத்தில் தமிழிசைக்கு முன்பு பா.ஜ.கவுக்கு எதிராக கோஷமிட்ட சோபியாவுக்கு தூத்துக்குடி நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை நேற்று தூத்துக்குடிக்கு விமானம் மூலம் சென்றார். அப்போது அவருடன் பயணம் செய்த சக பயணியான தூத்துக்குடியை சேர்ந்த சோபியா என்பவர் பா.ஜ.கவுக்கு எதிராக #பாசிசபாஜக_ஆட்சிஒழிக என கோஷமிட்டதாக கூறப்படுகிறது. இதனால் தமிழிசைக்கும் அந்த பெண்ணுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

பின்னர் விமானத்தில் இருந்து இறங்கிய பிறகு அந்த பெண் குறித்து தமிழிசை போலீசாரிடம் புகார் அளித்தார். இதனையடுத்து அப்பெண்ணை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். 

இதனையடுத்து சோபியாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சோபியாவுக்கு ஜாமீன் கேட்டு அவரின் தந்தை மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை முடிவில் சோபியாவுக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கி தூத்துக்குடி நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

விசாரணையின் போது, சோபியாவை கைது செய்திருப்பது அடிப்படை உரிமையை மீறும் செயல் என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. ஜாமீன் வழங்கிய நீதிபதி தமிழ்செல்வி, "பொதுவெளியில் எப்படி பேச வேண்டும் என்று சோபியாவின் தந்தை அவருக்கு கற்றுத்தர வேண்டும்" என்று கூறினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close