தன்பாலின உறவு வழக்கு தீர்ப்பு: கனிமொழி எம்.பி வரவேற்பு

  Newstm Desk   | Last Modified : 06 Sep, 2018 02:32 pm
kanimozhi-tweet-on-section-377-verdict

தன்பாலின உறவு குற்றம் இல்லை என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. இதற்கு பலதரப்பினர் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதற்கு தி.மு.க மகளிர் அணி தலைவர் கனிமொழி வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நமது வாழ்க்கையின் தனிப்பட்ட தேர்வுகளையும் முடிவுகளையும் சட்ட தீர்மானிக்கக் கூடாது. - உச்ச நீதிமன்றத்திற்கு வாழ்த்துகள்!

எல்.ஜி.பி.டி.க்யூ சமூகத்தினரின் உரிமைகளை இன்று சட்ட ரீதியாகவும் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். 

 

 

இந்தியா உலக அளவில் மனித உரிமைகளை நிறைவேற்றுவதற்கான முக்கியமான ஒரு அடி எடுத்து வைத்திருக்கிறது. இதன் பிறகாவது நாம் எல்லோரையும் அரவணைக்கக்கூடிய, சகிப்புத்தன்மை உடைய, சுய சிந்தனை உடைய ஒரு சமூகத்தை நோக்கி பயணிப்போமாக" என பதிவிட்டுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close