குட்கா ஊழல் முறைகேடு: 2 டி.எஸ்.பிகளுக்கு சம்மன்

  Newstm Desk   | Last Modified : 11 Sep, 2018 11:47 am
2-dsp-s-summoned-by-cbi-in-gutkha-scam-case

குட்கா முறைகேடு வழக்கில் மதுரை ரயில்வே டிஎஸ்பி மன்னர் மன்னன், தூத்துக்குடி சிப்காட் காவல் ஆய்வாளர் சம்பத்குமார் ஆகியோருக்கு சிபிஐ சம்மன் அளித்துள்ளது. 

2013ம் ஆண்டு குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து செங்குன்றம் அருகே உள்ள குட்கா குடோனில் கடந்த 2016ம் ஆண்டு வருமான வரித்தறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில் ஏராளமான ஆவணங்கள் சிக்கின. இதில் ரூ.250 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்யப்பட்டதும் தெரியவந்தது. 

மேலும் அங்கு கைப்பற்றப்பட்ட டைரியில் கிடைத்த தகவல்கள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி உட்பட பலரின் பெயர் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கு பின் சி.பி.ஐக்கு மாற்றப்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ அதிகாரிகள் 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் தற்போது இது தொடர்பாக டி.எஸ்.பி மன்னர் மன்னன் மற்றும் செங்குன்றம் ஆய்வாளராக பணிபுரலிந்த சம்பத் குமார் ஆகியோருக்கு சி.பி.ஐ சம்மன் அனுப்பி உள்ளது. குட்கா ஊழல் நடந்ததாக கூறப்படும் காலக்கட்டத்தில் மன்னர் மன்னன் செங்குன்றம் உதவி ஆணையராக இருந்தார். 

இந்த விவகாரத்தில் ஏற்கனவே டி.எஸ்.பி. மன்னர் மன்னன் மற்றும் ஆய்வாளர் சம்பத் ஆகியோரது வீடுகளில் சி.பி.ஐ. சோதனை நடத்தி இருந்தது. குட்கா ஊழல் தொடர்பாக காவல்துறையிடம் சி.பி.ஐ. விசாரிக்க இருப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close