ஸ்டாலின் சட்டையை கிழித்துக்கொண்டு தெருவுக்குதான் வருவார்- தம்பிதுரை

  ஐஸ்வர்யா   | Last Modified : 13 Sep, 2018 12:43 am
thambi-durai-criticism-on-narendra-modi

மாநில அரசை எதிர்த்து போராட்டம் நடத்தினால் ஸ்டாலின் தெருவுக்கு வருவார் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, “மாநில அரசை எதிர்த்து போராட்டம் நடத்தினால் ஸ்டாலின் சட்டையை கிழித்து கொண்டு தெருவுக்குதான் வருவார். சாலையில் உட்கார்ந்து கொள்வார்கள் அல்லதுபிரியாணி கடைக்குள் நுழைவார்கள். இப்படி எல்லாம் செய்தவர்கள் பாரத் பந்த் நடத்தியபோது என்ன செய்தார்கள், திமுக இரட்டை வேடம் போடுகிறது. உண்மையில் மக்கள் நலனில் அக்கறை இல்லை, எப்படியாவது பாஜக உடன் உறவை புதுப்பித்து கொள்ள ஸ்டாலின் பயணித்து கொண்டு இருக்கிறார். மத்திய அரசை எதிர்கின்ற துணிவு திமுகவுக்கு இல்லை என்பதைத்தான் இந்த பந்த் காட்டுகிறது. ஸ்டாலினுக்கு இப்போது பாரத ரத்னாதான் தேவை, பாரத் பந்த் தேவை இல்லை. பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு இவர்கள் போராடவில்லை” என குற்றஞ்சாட்டினார். 


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close