மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

  முத்துமாரி   | Last Modified : 13 Sep, 2018 01:22 pm
tn-weather-forecast

காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலில் மணிக்கு 35 முதல் 40 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள தகவலின்படி, "வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால்  கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம், புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். கடலில் மணிக்கு 35 முதல் 40 கி.மீ வேகத்தில் காற்று வீசும். அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலில் பலத்த காற்று வீசும். அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close