செங்கோட்டை, தென்காசியில் 144 தடை உத்தரவு!

  முத்துமாரி   | Last Modified : 14 Sep, 2018 01:37 pm

section-144-implemented-in-sengottai-tenkasi-taluk

செங்கோட்டை மற்றும் தென்காசியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் அறிவித்துள்ளார்.  

நேற்று விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, செங்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது. 5 விநாயகர் சிலைகள் ஒன்றாக எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், நிறைய பேர் கூடியிருந்ததால் மோதல் ஏற்பட்டதையடுத்து, அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

இதையடுத்து, அமைதியான முறையில் ஊர்வலம் நடக்க வேண்டும் என்ற நோக்கில், செங்கோட்டை, தென்காசி ஆகிய 2 தாலுகாக்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, அம்மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் அறிவித்துள்ளார். மேலும் அவர், நாளை காலை 6 மணி வரை இந்த உத்தரவு இருக்கும். இந்த விநாயகர் சிலை ஊர்வலம் செல்லும் மற்ற பகுதிகளுக்கும் தேவைப்படும் பட்சத்தில் தடை உத்தரவு பிறப்பிக்கப்படும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. ஏற்கனவே, இந்த பகுதிகளை சுற்றி 16 டாஸ்மாக் கடைகள் நேற்று மூடப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.

newstm.in

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close