அது என் குரலே இல்லை: எச்.ராஜாவின் விளக்கம்

  Newstm Desk   | Last Modified : 16 Sep, 2018 12:59 pm
h-raja-s-explanation-on-viral-video

மசூதி தெருவில் விநாயகர் ஊர்வலத்திற்கு தடை விதித்த போலீசாரையும், நீதிமன்றத்தையும் கொச்சையாக பேசியதாக பரவிவரும் வீடியோவில் இருப்பது தனது குரல் இல்லை என்று பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா விளக்கம் அளித்துள்ளார். 

புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரம் அருகே பள்ளிவாசல் உள்ளது. அங்கு விநாயகர் ஊர்வலத்திற்கு மேடை அமைக்க பா.ஜ.கவினர் அனுமதி கேட்டனர். ஆனால் மசூதி இருக்கும் இடம் என்பதால், உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி பாஜகவிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா அங்கு கோபமாக போலீசுடன் வாக்குவாதம் செய்தார். மேலும் அவர் போலீசாரையும், நீதிமன்றத்தையும் கொச்சையாக பேசினார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள எச்.ராஜா, "காவல், நீதித்துறைகளை மிரட்டும் தொனியில் வெளிவந்துள்ள வீடியோவில் உள்ள குரல் என்னுடையது அல்ல. யாரோ வீடியோவை எடிட் செய்து வெளியிட்டுள்ளார்கள்" என விளக்கமளித்துள்ளார்.

முன்னதாக  இதே போன்று பெரியார் சிலை குறித்து எச்.ராஜாவின் ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரியவிதத்தில் பதிவிடப்பட்டது. பின்னர் இது அட்மின் பதிவிட்டது என அவர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close