தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை: அமைச்சர் தங்கமணி

  Newstm Desk   | Last Modified : 18 Sep, 2018 02:09 pm
no-powercuts-in-tn-says-minister-thangamani

தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை, எனவே தேவையில்லாமல் பொதுமக்களிடையே பீதியை கிளப்ப வேண்டாம் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். 

தமிழகத்திற்கு வழங்கப்படும் நிலக்கரியை அதிகரிக்க வேண்டும் என அமைச்சர் தங்கமணி இன்று மத்திய எரிசக்தி மற்றும் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து வலியுறுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "தமிழகத்திற்கு தேவையான நிலக்கரியை உயர்த்தி வழங்குமாறு மத்திய அமைச்சரிடம் நான் வலியுறுத்தியுள்ளேன். அவருக்கு உயர்த்தி தருவதாக ஒப்புக்கொண்டுள்ளார். 

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று பரவலாக மழை பெய்து வருவதால் 1000 முதல் 1500 மெகாவாட் வரை மின்பயன்பாடு தற்போது குறைந்துள்ளது. இதனால் மின்தேவை அதிகரிக்கும்பட்சத்தில், தேவைப்படும் மின்சாரத்தை உடனடியாக தனியாரிடம் இருந்து வாங்க இயலாது. இதற்காக ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் பெறப்பட்டு, பின்னர் டெண்டர் கோரப்பட்டு, முடிவு செய்யப்பட்ட பிறகே தனியாரிடம் இருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்ய முடியும்.

மின்துறையை பொறுத்தவரையில் தமிழகம் எப்போதும் மின்மிகை மாநிலமாக தான் இருக்கிறது. தமிழகத்தில் மின்வெட்டு என்ற  பேச்சுக்கே இடமில்லை. தமிழகத்தில் எதிர்காலத்தின் நிலையை கருதியே மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. எனவே எதிர்கட்சிகள் தவறாக புரிந்துகொண்டு மக்களிடையே பீதியை கிளப்ப வேண்டாம்" என தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close