பெரியார் சிலை மீது காலணி வீச்சு: வழக்கறிஞர் ஜெகதீசனை குண்டாஸ் சட்டத்தில் அடைக்க உத்தரவு

  Newstm Desk   | Last Modified : 19 Sep, 2018 02:43 pm
gundaas-against-lawyer-jagadesan

பெரியார் சிலை மீது காலணி வீசிய வழக்கறிஞர் ஜெகதீசனை குண்டாஸ் சட்டத்தில் அடைக்க சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். 

செப்டம்பர் 17ம் தேதி பெரியார் பிறந்த நாளையொட்டி அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு விடுதலை சிறுத்தை கட்சியினர் மாலை அணிவிக்க வந்தனர். அப்போது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் பெரியார் சிலை மீது காலணியை வீசினார். அவரை பிடித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தாக்கினர். 

பின்னர் போலீசார் அந்த நபரை அழைத்து சென்றனர். அவர்கள் நடத்திய விசாரணையில் அவர் வழக்கறிஞர் என்பதும் அவரது பெயர் ஜெகதீசன் என்பது தெரியவந்தது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 

இந்நிலையில் அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close