ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான சிசிடிவி காட்சிகள் இல்லை: அப்போலோ மருத்துவமனை

  Newstm Desk   | Last Modified : 19 Sep, 2018 04:21 pm
no-cc-tv-footages-apollo

ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான சிசிடிவி காட்சிப்பதிவுகள் இல்லை என அப்போலோ நிர்வாகம் ஆறுமுகசாமி ஆணையத்திடம் தெரிவித்துள்ளது. 

ஜெயலலிதா சிகிச்சைக்காக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, பதிவான சிசிடிவி காட்சிகளை தாக்கல் செய்ய அப்போலோ நிர்வாகத்திற்கு ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அதற்கான காலக்கெடு முடிவடைந்த நிலையில், தலைமை நிர்வாக அதிகாரி சுப்பையா விஸ்வநாதனுக்கு ஆணையம் சம்மன் அனுப்பியது. 

இதற்கு தற்போது  அப்போலோ நிர்வாகம் பதில் அளித்துள்ளது. அதன்படி, " ஒரு மாதம் முதல் 45 நாட்கள் மட்டுமே சிசிடிவி காட்சிகளை சேமிக்க முடியும். சர்வரில் புதிய பதிவுகள் சேரும் போது பழைய பதிவுகள் தானாக அழிந்துவிடும். இதில், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற சிசிடிவி காட்சிகள் அழிந்துவிட்டது" என்று விளக்கம் அளித்துள்ளது. 

இதையடுத்து, ஆறுமுகசாமி ஆணையம், ஆளுநர் மாளிகைக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அதில், "மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து எய்ம்ஸ் மற்றும் ராஜ்பவனுக்கு இடையே கடிதத் தொடர்பு இருந்ததா? அறிக்கைகள் பெறப்பட்டிருப்பின், பொறுப்பு ஆளுநருக்கு முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டதா? அப்போலோ, ஆளுநர் & ஜனாதிபதி மாளிகைக்கு இடையே கருத்து பரிமாற்றம் நடந்திருந்தால் ஆளுநர் அதுகுறித்து கருத்து தெரிவிக்கலாம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close