20-09-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்

  Newstm Desk   | Last Modified : 20 Sep, 2018 05:36 pm
20-09-2018-top-10-news

கட்டாயமாக்கப்பட்ட ஹெல்மெட் விதி முதல் ஆசியக் கோப்பையில் களமிறங்கும் தீபக் சாஹர் வரை இன்றைய நாளுக்கான நியூஸ்டிம்மின் டாப் 10 செய்திகள்...

எம்.பி எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் சென்னையில் திறப்பு!

தமிழகத்தில் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்  அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் சிறப்பு நீதிமன்றத்தை உயர்நீதிமன்ற  நீதிபதி குலுவாடி ஜி ரமேஷ் திறந்து வைத்தார்.

நெஞ்சுவலி காரணமாக அமைச்சர் சி.வி.சண்முகம் அப்போலோவில் அனுமதி

45 வயதாகும் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நெஞ்சுவலி காரணமாக இன்று காலை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அமைச்சர் தங்கமணி பதவி விலக வேண்டும் : மு.க.ஸ்டாலின்

உற்பத்தியே இல்லாத காற்றாலையில் இருந்து மின்சாரம் பெற்றதாக கணக்குக் காட்டி, மின்துறை அமைச்சர் தங்கமணியின் நிர்வாகத்தில் உள்ள தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் மிக பெரிய ஊழல் நடைபெற்று வருகிறது என்றும் அதனால் அவர் பதவி விலக வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மின்சாரத்துறையில் ஊழல் செய்தது மூன்று அதிகாரிகள்தான்,.. வேறு எந்த ஊழலும் நடைபெறவில்லை: அமைச்சர் தங்கமணி ஒப்புதல்!

தமிழக மின்சாரத் துறையில் எந்தவித ஊழலும் நடைபெறவில்லை, 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதமே மின் வாரியத்தின் ஆடிட்டிங் மூலம் ஊழல் கண்டறியப்பட்டு 3 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது  என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

ஹெல்மெட் விதியை உடனே அமல்படுத்துக: தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

இருச்சக்கர வாகனத்தில் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதியை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து தொலைக்காட்சி, பத்திரிகை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளது.

கருணாஸ் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

சென்னையில் ஆர்பாட்டத்தின் போது முதல்வர் மற்றும் காவல் துறையை அவதூறாக பேசிய கருணாஸ் மீது 6 பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

நடுவானில் பயணிகளுக்கு காது, மூக்கில் இருந்து ரத்தம்; அவசரமாக தரையிறக்கப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானம்!

ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் நடுவானில் பயணிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, விமானம் வேகமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் உள் அழுத்தம் காரணமாக சுமார் 30 பயணிகளுக்கு மூக்கு, காதில் இருந்து ரத்தம் வந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

150 உடல்களுடன் சுற்றிய ட்ரக்: மெக்சிகோவில் அதிர்ச்சி சம்பவம்!

மெக்சிகோவில் ஒரு வாரமாக நகரம் முழுவதும் சுற்றி வந்த நாற்றம் வீசும் லாரியால் மக்கள் பெரும் பீதியடைந்தனர். பின்னர் அதில் 150 இறந்த உடல்கள் இருந்ததை அறிந்து அதிர்ந்து போயினர்.

மீண்டும் அமைதி பேச்சுவார்த்தை: பிரதமருக்கு இம்ரான் கான் கடிதம்

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடிதம் எழுதியுள்ளார்.

ஆசிய கோப்பை: ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் தீபக் சாகர்

பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு முதுகில் காயம் ஏற்பட்டது. எனவே அவருக்கு மாற்றாக இளம் வீரர் தீபக் சாஹர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.  மேலும் அக்சருக்கு கட்டைவிரலிலும், தாகூருக்கு இடுப்பு பகுதியிலும் காயம் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், ரவிந்தர ஜடேஜா மற்றும் சித்தார்த் கவுல், இந்திய அணியில் சேர்க்கப்பட்டு இருக்கின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close