டி.வி நடிகை நிலானி தற்கொலை முயற்சி!

  Newstm Desk   | Last Modified : 20 Sep, 2018 04:15 pm
tv-actress-nilani-suicide-attempt

பிரபல சின்னத்திரை நடிகை நிலானி தற்கொலைக்கு முயற்சி செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தற்கொலைக்கு முயற்சி செய்த அவரை  காப்பாற்றி கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். 

சின்னத்திரை நடிகை நிலானி திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்கிறார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில் நடிகை நிலானியும், சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த உதவி இயக்குநர் காந்தி லலித்குமார் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். தன்னை  திருமணம் செய்துகொள்ளும்படி, லலித்குமார் வற்புறுத்த, அவரது நடவடிக்கைகள் பிடிக்காததால் நிலானி திருமணம் செய்ய மறுத்துள்ளார். தொடர்ந்து, தனது காதலன் திருமணம் செய்துகொள்ளும்படி தொல்லை கொடுப்பதாக நிலானி  காவல்துறையிடம் புகார் கூறியிருந்தார். இதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட லலித்குமார் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

பின்னர் இதுதொடர்பாக  நிலானி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர் தலைமறைவாகிவிட்டதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு கதறி அழுதபடி ஆட்டோவில் வந்த நிலானி, போலீஸ் அதிகாரிகளிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். தொடர்ந்து அங்குள்ள அதிகாரியிடம் பேசிவிட்டு சென்றார். தொடர்ந்து செய்தியாளர்களிடமும் பேட்டியளித்தார். 

இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், நடிகை நிலானி இன்று தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். சென்னை ஆலப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் அவர் கொசு மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.இதன்பின்னர் அவர் காப்பாற்றப்பட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக  சேர்க்கப்பட்டுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close