வேலூரில் ஒரு கிலோ கேக் வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 21 Sep, 2018 02:58 pm
buy-1kg-cake-for-1-liter-petrol-free

ஒரு கிலோ கேக் வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என்கிற தனியார் பேக்கரியின் அறிவிப்பு வேலூரில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. 

பெட்ரோல், டீசல் விலை முன்பு எப்போதைக்காட்டிலும் இப்போது நாளுக்கு நாள் உச்சம் தொட்டு வருகிறது. அதிகபட்சமாக இன்றைய தேதியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ 85.58 பைசாவுக்கும், டீசல் ரூ.78.10 பைசாவுக்கும் விற்கப்பட்டு வருகிறது. இந்த விலையேற்றத்தைக் கண்டித்து எதிர்கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில், பெட்ரோல் விலை அதிகரிப்பு பல விநோதங்களை நிகழ்த்தி வருகிறது. சமீபத்தில் நடந்த திருமண விழாவில் தம்பதிகளுக்கு 5 லிட்டர் பெட்ரோல் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

அதேபோல் இணைய செயலிகள் மூலம் 5 லிட்டர் பெட்ரோல் போட்டால் 1 லிட்டர் இலவசம் என சலுகைகளை வாரி வழங்குகின்றன. இந்த நிலையில், தமிழகத்தில் வேலூரில் இருக்கும் தனியார் பேக்கரி ஒன்று வித்தியாசமான சலுகையை அறிவித்து இருக்கிறது. ரூ.495 ரூபாய் மதிப்புள்ள பிறந்த நாள் கேக் அல்லது மற்ற வகை இனிப்பு பண்டங்களை வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம் என அறிவித்துள்ளது. 

இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதை பிரபல பாடகி ஒருவரும் ஷேர் செய்திருப்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close