பாரதிய ஜனதா கட்சி மதவாத கட்சிதான்- இல. கணேசன்

  ஐஸ்வர்யா   | Last Modified : 23 Sep, 2018 01:56 am
ela-ganesan-speaks-about-bjp

பாரதிய ஜனதா கட்சி மதவாத கட்சிதான் என்பதில் பெருமை கொள்கிறோம் என பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் தெரிவித்துள்ளார். 

ராஜபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இல.கணேசன், “ 7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் சட்ட ரீதியான முடிவெடுப்பார். என்ன முடிவாக இருக்கும் என்பதை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். 7 பேர் விடுதலை குறித்து பாரதிய ஜனதா கட்சி இதுவரை எந்த ஒரு கூட்டத்திலும் பேசி முடிவெடுக்கவில்லை. அரசியல் கட்சிக்கு சம்மந்தம் இல்லாமல் ஆளுநர் கையில் உள்ளதால் மாநில, மைய, தேசிய குழுவிலும் பேசப்படவில்லை. ரபேல் போர் விமானம் வாங்கிய விவகாரத்தில் ராகுல் காந்தி பொய்யை திரும்ப திரும்ப சொன்னாலும் உண்மையாகாது.

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவெடுக்கப்படும். ஹெச்.ராஜா சட்ட வல்லுநர் என்பதால் சர்ச்சைக்குரிய வழக்கை சட்ட ரீதியில் திறமையுடன் எதிர்கொள்வார். பாரதிய ஜனதா கட்சி மதவாத கட்சிதான் என்பதில் பெருமை கொள்கிறோம். இஸ்லாமியர்களுக்கோ கிருஸ்தவர்களுக்கோ ஒரு பிரச்சனை என்றால் பாரதிய ஜனதா கட்சி குரல் கொடுத்து போராடும் ஆனால் இந்துக்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் பாரதி ஜனதா கட்சியை தவிர ஒரு அரசியல் கட்சியும் குரல் கொடுக்காது. இந்துக்களுக்காக பாரதிய ஜனதா கட்சி மட்டும் குரல் கொடுப்பதால் பா.ஜ.கவை மதவாத கட்சி என கூறுகிறார்கள்” என்றார். 


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close