ஸ்டாலின் நலமாக, மகிழ்ச்சியாக இருக்கிறார்: வைகோ பேட்டி

  Newstm Desk   | Last Modified : 27 Sep, 2018 03:04 pm
vaiko-press-meet-after-meeting-stalin

திராவிட முன்னேற்ற கட்சியின் தலைவர் மு.கஸ்டாலின் தற்போது நல்ல உடல்நலத்துடன், மகிழ்ச்சியாக இருக்கிறார் என ம.தி.மு.க தலைவர் வைகோ அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று வந்த பின் பேட்டியளித்தார். 

கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று இரவு தி.மு.க தலைவர் ஸ்டாலின் அனுமதிக்கப்ட்டார். அவருக்கு சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க ம.தி.மு.க தலைவர் வைகோ இன்று அப்பல்லோ சென்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "திராவிட முன்னேற்ற கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், நேற்று சாதாரணை மருத்துவ பரிசோதனைக்காக அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார். அவர் தற்போது நல்ல உடல்நலத்துடன், மகிழ்ச்சியாக இருக்கிறார். அவருடன் ஒரு சில நிமிடங்கள் பேசினேன். மேலும் அவரது குடும்பத்தாரிடமும் பேசினேன். அவர் விரைவில் வீடு திரும்புவார்" என்று கூறினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close