ஐ.பி.எல் வழக்கில் கருணாஸுக்கு அக். 4 வரை நீதிமன்றக்காவல்!

  Newstm Desk   | Last Modified : 27 Sep, 2018 04:28 pm
karunas-is-under-judicial-custody-upto-oct-4-egmore-court

ஐ.பி.எல் போட்டிக்கு எதிராக போராடிய வழக்கில் நடிகர் கருணாஸுக்கு அக்டோபர் 4ம் தேதி வரை நீதிமன்றக்காவல் அளித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

முக்குலத்தோர் புலிப்படை இயக்கத் தலைவரும், திருவாடானை தொகுதி எம்.எல்.ஏவுமான கருணாஸ் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற விழாவில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் முதல்வரை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இது தொடர்பாக அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க, காவல்துறை அனுமதி கோரிய நிலையில், சென்னை எழும்பூர் நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்தது. 

இதைத் தொடர்ந்து சென்னையில் ஐ.பி.எல் போட்டிக்கு எதிராக போராடிய வழக்கில் நடிகர் கருணாஸுக்கு அக்டோபர் 4ம் தேதி வரை நீதிமன்றக்காவல் அளித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close