தமிழகம் முழுவதும் மருந்துக்கடைகள் அடைப்பு...மக்கள் அவதி!

  Newstm Desk   | Last Modified : 28 Sep, 2018 08:58 am
pharmacies-are-closed-in-tn

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு மத்திய அரசு அனுமதிக்கக்கூடாது என தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கம் சார்பில் இன்று மருந்துக்கடைகளை அடைத்து வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதுமுள்ள மருந்துக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

ஆன்லைனில் மருந்து விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதிக்கும் பட்சத்தில் நாடு முழுவதுமே போலியான மற்றும் காலாவதியான மருந்துகள் விற்பனையாகும் சூழ்நிலை உருவாகும் என மருந்து சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த சூழ்நிலையில், மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொருட்டு நாடு முழுவதும் உள்ள மருந்துக்கடைகள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தன. 

அதன்படி இன்று தமிழகம் முழுவதுமுள்ள மருந்துக்கடைகள் மூடப்பட்டுள்ளன. நேற்று நள்ளிரவு 12 மணி முதல் இன்று மாலை 6 மணி வரை கடைகள் மூடப்பட்டுள்ளது. கடையடைப்பு நடைபெறும் நேரத்தில் அவசர மருந்து தேவைக்கு 044 - 28191522 என்ற எண்ணில் தமிழ்நாடு மருந்து வணிகர் சங்க அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இன்று இந்தியா முழுவதும் 8 லட்சம் கடைகளும், தமிழகத்தில் 35,000 மருந்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் முன்னதாக அறிவிக்கப்பட்டது போல் மருத்துவமனையில் உள்ள மருந்துக்கடைகள் திறக்கப்பட்டுள்ன.

மேலும்,  சென்னையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை இன்று மருந்தாளுனர்கள் போராட்டம் நடத்த உள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close