விரைவில் முதியோருக்கும் தடுப்பூசி- அமைச்சர் சரோஜா

  ஐஸ்வர்யா   | Last Modified : 01 Oct, 2018 08:49 pm
as-soon-as-the-vaccine-for-the-elders-says-minister-sarjoa

முதியோர் இல்லத்தில் இருக்கும் முதியோருக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறேன் விரைவில் தொடங்கப்படும் என சத்துணவுத்துறை அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார். 

சர்வதேச முதியோர் தின விழாவில் கலந்துக்கொண்டு பேசிய சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, “சிறப்பாக சேவை புரிந்த முதியோர் இல்லத்திற்கும் சிறப்பாக சேவையாற்றியவர்களுக்கும் வருதுகள் வழங்கப்பட்டது. 2011ல் முதியோர் உதவித்தொகை 500ல் இருந்து 1000 ஆக உயர்த்தப்பட்டது. இந்த திட்டத்தில் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் பயனடைந்து வருகிறார். மேலும் முதியோர் இல்லங்களில் வசிக்கும் முதியோர்களுக்கு 4 கோடி ஒதுக்கீடு செய்து சுத்தமான உணவாக வழங்கப்பட்டு வருகிறது. முதியோர் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் ஒரே இடத்தில் வசிக்கும் 51 ஒருங்கிணைந்த வளாகம் தமிழ்நாட்டில் உள்ளது. இதில் 1200 குழந்தைகள் மற்றும் 1200 முதியோர்கள் தங்கியுள்ளனர். அங்கு இருக்கும் முதியவர்கள் பள்ளிக்கு சென்ற குழந்தைகள் வரவில்லை என்றால் அன்போடு காத்துக்கொண்டிருக்கின்றனர். முதியோர் இல்லத்தில் இருக்கும் முதியோருக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை சட்டமன்றத்தில் அறிவித்தேன். முதியோர்களுக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் பரிசோதனை செய்யப்பட்டு விரைவில் தடுப்பூசி போடப்படும். முதியவர்களுக்கு கொடுத்துவரும் உதவித்தொகை எதுவும் நிறுத்தப்பட வில்லை” என தெரிவித்தார். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close