தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன்: மத்திய அரசு

  Newstm Desk   | Last Modified : 02 Oct, 2018 06:09 am
center-to-extract-hydrocarbon-in-3-places-in-tn

ஹைட்ரோகார்பன், ஸ்டெர்லைட் என பல்வேறு திட்டங்களுக்கு தமிழகத்தில் எதிர்ப்பு இருந்து வரும் நிலையில், 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அமைக்கவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில், நெடுவாசல், கதிரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில், மீத்தேன் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் முயற்சித்து வந்தன. ஆனால், விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால், இந்த திட்டங்கள் தற்காலிகமாக கைவிடப்பட்டன. இதைத் தொடர்ந்து, காவிரி சுற்றுவட்டார பகுதிகளை, பெட்ரோலிய முதலீட்டு மண்டலமாக மத்திய அரசு அறிவித்தது. 

இந்நிலையில், மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், நாடு முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டங்களை அமைக்க வேதாந்தா, ஓ.என்.ஜி.சி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார். அதில் தமிழகத்தில், 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டங்கள் அமைக்கப்படவுள்ளதாம். காவிரிப்படுகையின் கடல் பகுதியில் இந்த திட்டங்கள் வரவுள்ளதால், இந்தமுறை எதிர்ப்பு இருக்காது என மத்திய அரசு கருதுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close