தமிழகத்தின் அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

  Newstm Desk   | Last Modified : 02 Oct, 2018 02:21 pm
rainfall-happened-in-tn-says-cmc

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் அநேக இடங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, "வளிமண்டலத்தில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்மேற்கு வங்கக் கடல், இலங்கை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியின் அநேக இடங்களிலும், அதிலும் உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. 

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவில் லேசான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குன்னூரில் 7 செ.மீ. பரமக்குடி, விளாத்திகுளம் பகுதிகளில் தலா 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது" என தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close