மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

  Newstm Desk   | Last Modified : 04 Oct, 2018 01:18 pm
met-dept-director-balachandran-press-meet

குமரி, தெற்கு கேரளா, லட்சத்தீவு பகுதிகளுக்கு 5, 6 தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் ஆழ் கடலில் மீன் பிடிக்க சென்றவர்கள் 5ம் தேதிக்கு முன் கரைக்கு திரும்ப வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன், "தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் இலங்கை மற்றும் தமிழகத்தை ஒட்டி வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதனால் அக்டோபர் 5ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவையில் பல்வேறு இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்யும். அக்டோபர் 5ம் தேதி தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இது அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறும். 

இது புயலாக மாறி, ஓமன் கடல் பகுதியில் கரையை கடக்கும். எனவே குமரி கடல், தெற்கு கேரளா, லட்சத்தீவு பகுதிகளுக்கு 5, 6 தேதிகளில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம். இதே போல ஆழ் கடலில் மீன் பிடிக்க சென்றவர்கள் 5ம் தேதிக்கு முன் கரைக்க திரும்ப வேண்டும்.

ரெட் அலெர்ட் முன்னெச்சரிக்கைகாக விடுக்கப்பட்டுள்ளது. எந்ததெந்தபகுதிகளில் கனமழை மழை பெய்யும் என்பதை அறிந்து வரும் நாட்களில் தகவல் அளிக்கப்படும்" என்றார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close