ரெட் அலெர்ட் குறித்து அச்சம் தேவையில்லை: வானிலை ஆய்வு மைய இயக்குநர்

  Newstm Desk   | Last Modified : 05 Oct, 2018 02:01 pm
chennai-met-dept-director-balachandran-press-meet

ரெட் அலெர்ட் குறித்து அச்சம் தேவையில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்தார்.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது, "தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் இலங்கை மற்றும் தமிழகத்தை ஒட்டி வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்ந்தது. குறிப்பாக எண்ணூரில் 13 செ.மீ மழை பதிவானது. மேலும் செங்கல்பட்டில் 12 செ.மீ மழை பதிவானது. 

அக்டோபர் 8 வரை மழை பரவலாக மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும். தெற்கு வங்ககடலில் 8ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இது வடக்கிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழ்நிலையாக இருக்கும் அடுத்த 3 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம். 

ரெட் அலெர்ட் எச்சரிக்கை பற்றி அச்சப்படவேண்டாம். மேற்கு தொடர்ச்சி மலை பகுதியையொட்டி உள்ள பகுதிகளில் அன்றைய தினம் கனமழை பெய்யும்" என்றார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close