இபிஎஸ், ஓபிஎஸ் உடன் இணைவது தற்கொலைக்கு சமம்: டிடிவி தினகரன்

  Newstm Desk   | Last Modified : 05 Oct, 2018 05:11 pm
o-paneerselvam-tried-to-meet-me-t-t-v-dinakaran

ஓ.பன்னீர் செல்வம் தன்னை சந்தித்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை கலைக்க வேண்டும் என்று கூறியது உண்மை தான் என்றும் அவர்களுடன் இணைவது தற்கொலைக்கு சமம் என்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி தலைவர் டி.டி.வி.தினகரன் கூறினார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கட்சியின் தலைவர் டி.டி.வி.தினகரன் இன்று தனது வீட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "2017ம் ஆண்டு ஜூலை மாதம் 12ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் எனது நண்பர் ஒருவர் மூலம் என்னை சந்திக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார. நான் எனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி பின்னர் பன்னீர் செல்வத்தை சந்தித்தேன்

அந்த சந்திப்பின் போது அவர், "நான் தவறு செய்துவிட்டேன். உங்களை எதிா்த்து பேசியிருக்கக் கூடாது. எடப்பாடி பழனிசாமி ஆட்சியை கலைக்க வேண்டும்” என்றார். அந்த சந்திப்பை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்த விவகாரம் நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்நிலையில் கடந்த செப்டம்பா் மாதத்தின் இறுதி வாரத்தில் அவர் மீண்டும் தனது நண்பா் மூலம் என்னை சந்திக்க முயற்சி செய்தாா். ஆனால் அந்த சந்திப்பை நான் மறுத்துவிட்டேன். 

இது போன்று என்னை அவர் மீண்டும் சந்திக்க முயற்சிக்க கூடாது என்பதற்காக தான் இப்போது இந்த தகவலை வெளியிடுகிறோம்.  அவர்களுடன் மீண்டும் இணைய நான் முயற்சி செய்வதாக அமைச்சர் தங்கமணி கூறியிருக்கிறார். அதற்கான ஆதாரங்கள் இருந்தால் அவர் வெளியிட வேண்டும். ஓ.பன்னீர் செல்வம்-எடப்பாடி பழனிசாமியுடன் இணைவது தற்கொலைக்கு சமம். 

குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்கவேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை. மத்திய அரசே தற்போதைய தமிழக அரசை தாங்கி பிடித்திருக்கிறது. எங்களது கட்சி சார்பில் பொதுத் தோ்தலில் போட்டியிட்டு தமிழக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்" என்றார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Loading...
Advertisement:
[X] Close