‘தித்லி’ புயல்: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

  சுஜாதா   | Last Modified : 10 Oct, 2018 05:51 am
thimli-storm-formed

வங்கக்கடலில் உருவாகியல்ல ‘தித்லி’ புயலால் தமிழகத்தில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். 

இது குறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் புயலாக மாறி உள்ளது. அந்த புயலுக்கு ‘தித்லி’ என்று பெயரிடப்பட்டு உள்ளது. அந்த புயல் ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கு தென்கிழக்கில் 530 கி.மீ. தூரத்திலும், ஆந்திர மாநிலம் கலிங்கபட்டினத்திற்கு தென்கிழக்கில் 480 கி.மீ. தூரத்திலும் நிலை கொண்டு உள்ளது.

இந்த புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும். அது நாளை (வியாழக்கிழமை) காலை கலிங்கபட்டினத்திற்கும், கோபால்பூருக்கும் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) சில இடங்களில் கன மழை பெய்யும். சென்னையில் சில பகுதிகளில் லேசான மழை பெய்யும்.  இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.

மேலும், தித்லி புயல் கரையை கடக்கும் போது ஒடிசாவில் சில மாவட்டங்களில் கனமழை பெய்யும். அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்தும்படி ஒடிசா அரசு தெரிவித்துள்ளது.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close