நெல்லை மகா புஷ்கர விழாவில் நீராடிய ஆளுநர்!

  Newstm Desk   | Last Modified : 11 Oct, 2018 12:24 pm

tamirabharani-maha-phuskaram-begins-today-tn-governor-inaugurate-the-festival

நெல்லையில் நடைபெறும் மகா புஷ்கர விழாவை தொடங்கி வைத்த ஆளுநர் பன்வரிலால் புரோஹித், ஆற்றில் நீராடி வழிபட்டார். 

குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் போது, ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த ராசிக்கு உரிய நதியில் புஷ்கர விழா நடத்தப்படுவது வழக்கம். அங்கவகையில் இந்த ஆண்டு குரு பகவான் விருச்சிக ராசிக்கு இடம் பெயர்ந்ததையடுத்து, விருச்சிக ராசிக்குரிய  தாமிரபரணி ஆற்றில் புஷ்கர விழா நடத்தப்படுகிறது.

நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் மகா புஷ்கரம் விழா இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது. இன்று முதல் 12 நாட்கள் வரை இந்த விழா நடைபெறும். 144 ஆண்டுகளுக்கு பிறகு மஹாபுஷ்கர விழா தாமிரபரணி ஆற்றில் நடைபெறுகிறது. எனவே இந்த புஷ்கர விழாவையொட்டி, பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு அமைப்புகள் சார்பில் பூஜைகள், சிறப்பு யாகங்கள் செய்யப்படவுள்ளது. ஏராளமான மக்களும் தாமிரபரணி ஆற்றில் நீராடி வழிபட உள்ளனர். 

இன்று இந்த தாமிரபரணி புஷ்கர விழாவை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஆற்றில் புனித நீராடி வழிபட்டார். அவருக்கென்று தனி இடம் ஏதும் ஒதுக்கப்படாமல் மக்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இடத்திலேயே நீராடினார். மேலும், இன்று தொடங்கிய விழாவில் ஆன்மிக செயற்பாட்டாளர்கள் பலர் கலந்துகொண்டனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close