சென்னையில் 130 கடைகளுக்கு சீல்! மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

  Newstm Desk   | Last Modified : 11 Oct, 2018 02:59 pm

chennai-coporation-officers-sealed-to-shops

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தும், என்.எஸ்.சி போஸ் சாலையில் இயங்கி வந்த 130 கடைகள் மூடாததையடுத்து, அந்த கடைகளுக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இன்று சீல் வைத்துள்ளனர்.

சென்னை என்.எஸ்.சி போஸ் சாலையில் உள்ள பெரும்பாலான கடைகள் சில்லறை விற்பனைக்கு அனுமதி பெற்று, மொத்த விற்பனையில் ஈடுபட்டு வந்தன. இதனால் அங்குள்ள மொத்த விற்பனையாளர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். 

இதைத்தொடர்ந்து, கோயம்பேடு மொத்த விற்பனை வியாபாரிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் அனுமதியில்லாமல் மொத்த விற்பனை செய்துவந்த 130 கடைகளை மூடுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். 

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி, கடைகளை மூடாததால் சென்னை மாநகராட்சி அதிகாரிகள், கடைகளுக்கு இன்று சீல் வைத்துள்ளனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close