விற்பனைக்கு வருது அதிமுகவினர் கும்பிடு போட்ட ஹெலிகாப்டர்..!

  ஐஸ்வர்யா   | Last Modified : 11 Oct, 2018 05:04 pm

government-ready-so-sell-a-admk-s-helicopter

அதிமுகவினர் அனைவரும் தலைக்கு மேலே கரம் கூப்பியும், சாஷ்டாங்கமாக தரையில் விழுந்தும் கும்பிட்டு வழிபட்ட ஹெலிகாப்டரை விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

ஜெயலலிதா சென்னையில் இருந்து அரசு முறைப்பயணமாக வெளியூர் செல்வதற்காக, 2006ம் ஆண்டு ‘பெல் 412 இ.பி’ என்ற வகையைச் சேர்ந்த நவீன வசதிகளுடன் கூடிய ஹெலிகாப்டர் ஒன்று அரசு சார்பில் வாங்கப்பட்டது. இரண்டு இன்ஜின்களைக் கொண்ட இந்த ஹெலிகாப்டரில் 11 பேர் பயணம் செய்ய முடியும்.

ஜெயலலிதா இந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்யும்போது, கீழே இருக்கும் அதிமுகவினர் அனைவரும் தலைக்கு மேலே கரம் கூப்பியும், சாஷ்டாங்கமாக தரையில் விழுந்தும் கும்பிட்டு வழிபட்டு வந்தனர். இந்த விவகாரத்தால் அதிமுகவினர், பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சியினரின் கேலிக்கும் கிண்டலுக்கும் இன்றுவரை ஆளாகி வருகின்றனர்.

ஜெயலலிதா இறந்த பிறகும், கடந்த மார்ச் மாதம் வரை பயன்படுத்தப்பட்டு வந்த இந்த ஹெலிகாப்டர் தற்போது பழுதடைந்துள்ளதால், சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனை பழுதுபார்த்து மீண்டும் பயன்படுத்துவதற்கு அதிக செலவாகும் என்பதால் இந்த ஹெலிகாப்டரை விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

எனவே, இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும்படி மாநில வணிக நிறுவனத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஹெலிகாப்டரை விற்பதற்கு சர்வதேச அளவில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. விரைவில் இந்த ஹெலிகாப்டர் விற்பனை நடைபெறும் என்று கூறப்படுகிறது.

Newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close