தீபாவளிக்கான சிறப்புப் பேருந்துகள் அறிவிப்பு!

  Newstm Desk   | Last Modified : 11 Oct, 2018 06:34 pm

diwali-special-buses-are-announced-by-govt

தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழகம் மற்றும் பிற மாவட்டங்களுக்கு 20,567 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல் பண்டிகையின் போது சிறப்பு பேருந்துகள் இயக்குவது வழக்கம். அதன்படி, இந்தாண்டுக்கான சிறப்பு பேருந்துகள் குறித்த அறிவிப்பை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று வெளியிட்டுள்ளார். 

இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறிய தகவல்கள் பின்வருமாறு:

► முன்னதாக அண்ணா நகரில் இருந்து ஆந்திரா பகுதிகளுக்கு இயக்கப்பட்ட பேருந்துகள் இந்தாண்டு புதிதாக திறந்து வைக்கப்பட்டுள்ள மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து இயங்கும். 

► சைதாப்பேட்டையில் இருந்து இயங்கிய பேருந்துகள், மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப கே.கே.நகரில் இருந்து இயக்கப்படும். அதே நேரத்தில் சைதாப்பேட்டையில் இருந்து புதுச்சேரி மார்க்கமாக பேருந்துகள் இயக்கப்படும். 

► மற்றபடி, பூந்தமல்லியில் இருந்து கிருஷ்ணகிரி, ஓசூர், வேலூர், தருமபுரி ஆகிய பகுதிகளுக்கும், தாம்பரம், கோயம்பேடு பகுதியில் இருந்து தென் மாவட்டங்களுக்கும் பேருந்துகள் செல்லும். 

► இந்தாண்டு மொத்தமாக தீபாவளி சிறப்பு பேருந்துகளாக 20,567 பேருந்துகள் இயக்கப்படும். இதில், சென்னையில் இருந்து 11,367 பேருந்துகளும், பிற மாவட்டங்களில் இருந்து 9,200 பேருந்துகளும் இயக்கப்படும், பண்டிகை முடிந்து மொத்தமாக 11,842 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 

► சென்னையில் இருந்து நவம்பர் 3,4,5 தேதிகளில் 11,367 பேருந்துகள் இயக்கப்படும். நவம்பர் 1ம் தேதி முதல் முன்பதிவு தொடங்குகிறது. கோயம்பேட்டில் இதற்காக 26 முன்பதிவு மையங்கள் திறக்கப்படும். 

►  ஆம்னி பேருந்துகளுக்கு என்று தனியாக கட்டண நிர்ணயம் செய்யப்படவில்லை. ஆனால் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 

► கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது 5,52,624 பயணிகள் சிறப்பு பேருந்துகளை உபயோகித்துள்ளனர். 

► விரைவில் 100 மின்சார பேருந்துகள் வாங்கப்படும். சென்னையில் 80 பேருந்துகளும், கோவையில் 20 பேருந்துகளும் இயக்கப்படும். 

► மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று போக்குவரத்து தொழிலாளர்களின் நிலுவைத்தொகையை வழங்குவது குறித்தும் அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close