சின்மயியை கலாய்த்த சுப. வீரபாண்டியன்

  ஐஸ்வர்யா   | Last Modified : 11 Oct, 2018 05:23 pm

subha-veera-pandian-tweet-about-chinmayi-issues

பாடகி சின்மயியை கிண்டலடித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்த சுப வீரபாண்டியன், நெட்டிசன்களின் விமர்சனத்திற்கு பிறகு அதை டெலிட் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

பல்வேறு துறைகளில் இருக்கும் பெண்களும் தங்கள் வாழ்நாளில் தங்களுக்கு நேர்ந்த பாலியல் ரீதியான தொந்தரவுகளை பெரிதாக வெளிப்படுத்த இயலாத சூழல் இருந்து வந்த நிலையில் தற்போது திரையுலக பெண் பிரபலங்கள் METOO என்ற ஹெஷ்டேக் தொடங்கி அதில் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் தொல்லைகளை உலக அளவில் வெளிப்படையாக கூறி வருகின்றனர். சிலர் நேரடியாக தன்னை தொந்தரவு செய்த நபரையே அம்பலப்படுத்தியும் வருகின்றனர்.

அந்தவகையில் பாடகி சின்மயி தனக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவுகள், குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். குறிப்பாக கவிஞர் வைரமுத்து தன்னை பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தியதாக புகார் கூறியது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் வைரமுத்துக்கு ஆதாரவாக சிலரும், சின்மயிக்கு ஆதரவாக சிலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 

இதுகுறித்து சுப.வீரபாண்டியன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு ஜோக்கை பதிவு செய்து சின்மயியை மறைமுகமாக கலாய்த்துள்ளார். அதாவது "இன்ஸ்பெக்டர், ஒரு பாலியல் புகார் குடுக்க வந்திருக்கேன்".... ஆனால் 
"தப்பு நடந்து 14 வருஷம் ஆயிடுச்சா?" என பதிவிட்டது நெட்டிசன்கள் மத்தியில் கடுங்கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதே குற்றச்சாட்டு பாஜக பிரமுகர் யார் மீதாவது இருந்திருந்தால் சுப.வீரபாண்டியனின் அணுகுமுறையே வேறு விதமாக இருந்திருக்கும், உங்க வீட்டு பொன்னா இருந்தா இப்படிதான் கலாய்ப்பீங்களா? என நெட்டிசன்கள் கொந்தளித்து விட்டனர். அடுக்கடுக்காக வந்த விமர்சனங்களையடுத்து அந்த ட்வீட்டுகளைக் கண்டு அதிர்ந்துபோன சுப. வீரபாண்டியன், அவரது டிவீட்டை அழித்துவிட்டு சென்று விட்டார். அதையும் நெட்டசன்கள் கிண்டல் செய்து கொண்டேயுள்ளனர். 
 

Newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close