முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்!

  Newstm Desk   | Last Modified : 13 Oct, 2018 10:55 am
ex-minister-parithi-ilamvazhuthi-passed-away

தமிழக முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி உடல்நலக் குறைவால் இன்று காலமானார். 

பரிதி இளம்வழுதி 2006-11ம் ஆண்டில் தி.மு.க அமைச்சரவையில் செய்தி மற்றும் விளரம்பரத் துறை அமைச்சராக இருந்தார். பின்னர் கடந்த 2013ம் ஆண்டு திமுகவில் இருந்து விலகி அ.தி.மு.கவில் இணைந்தார். பின்னர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.கவில்  இருந்து விலகி அ.ம.மு.கவில் இணைந்துகொண்டார். 

1996-2001ல் சட்டப்பேரவை துணை சபாநாயகராக பதவி வகித்துள்ளார். அதேபோன்று 1989-2011ம் ஆண்டு வரை எழும்பூர் தொகுதியில் தொடர்ந்து எம்.எல்.ஏவாக இருந்தார்.

இதையடுத்து உடல்நலக்குறைவு  காரணமாக பரிதி இளம்வழுதி இன்று காலை உயிரிழந்தார். சென்னை அடையாறில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு கட்சியினர் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்கு உடல் வைக்கப்படவுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close