விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு? -எஸ்.ஏ.சந்திரசேகர்

  முத்துமாரி   | Last Modified : 13 Oct, 2018 10:02 am
s-a-chandrasekar-press-meet-talks-about-vijay-s-political-entry

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை பலர் எதிர்க்கிறார்கள், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு? என எஸ்.ஏ.சந்திரசேகர் கேள்வி எழுப்பியுள்ளார். 

இயக்குநரும், நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் பாபநாசத்தில் மகா புஷ்கர விழாவில் கலந்துகொண்டு வழிபாட்டார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர் ஆனாலும் நான் தற்போது இந்து மதத்தை பின்பற்றுகிறேன். என்னை ஆன்மிக குருவாக மாற்றியது குரு ஜக்கி வாசுதேவ்.

விஜய் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் அவர் அரசியலுக்கு வருவதை பலர் எதிர்க்கிறார்கள். விஜய் அரசியலுக்கு வருவதை கண்டு சிலர் அச்சப்படுகிறார்கள். மக்களால் உயர்த்தப்பட்டவர் மக்களுக்கு நல்லது செய்தால் என்ன தவறு? விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு?" என்றார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close