விரைவில் அதிமுகவிற்கு பெண்கள் தலைமை ஏற்பர்- செல்லூர் ராஜூ

  ஐஸ்வர்யா   | Last Modified : 13 Oct, 2018 05:11 pm
will-soon-be-the-women-chief-of-admk-says-selluraju

விரைவில் அதிமுகவிற்கு பெண்களின் தலைமை வரும், மேலும் பெண்கள், ஆண்களுக்கு நிகராக அதிமுகவை வழிநடத்தும் காலம் வரும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, “குழந்தைகளுக்கு தாயின் இன்ஷியலையும், பயன்படுத்தலாம் என புரட்சி செய்தவர் ஜெயலலிதா. இது போன்று மகளிருக்காக பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியவர் ஜெயலலிதா. 28 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் கட்சி என்றால் அது அதிமுக மட்டும்தான்.   இந்த அரசு மக்களுக்கான அரசு, அவர்கள் நினைத்ததால்தான் நாங்கள் ஆட்சியில் இருக்கிறோம். 

எதிர்காலத்தில் நிச்சயமாக பெண்கள் சாதிக்கும் காலம் வரும். இயக்கத்தை வழிநடத்த பெண்கள் வருவார்கள். பெண்களும் ஆண்களை போன்று தேர்தல் காலத்தில் இணைந்து செயல்படுவதால் எதிர்காலத்தில் அதிமுகவின் இயக்கத்தில் வாய்ப்பு இருக்கும். கமல்ஹாசனை பார்த்து மயங்கி அவருக்கு ஓட்டு போடும் அளவிற்கு மக்கள் முட்டாள்கள் இல்லை. மக்கள் செயல்பாட்டைதான் பார்ப்பார்கள். யாரும் அழகை பார்க்க மாட்டார்கள். செயல்பாடு தான் முக்கியம், கடல் வற்றி மீன் சாப்பிடலாம் என்பதை போன்ற நிலையில்தான் கமல்ஹாசன் தற்போது உள்ளார்” என்று கூறினார். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close