ஊழல் செய்வதில் குறியாக இருக்கும் அ.தி.மு.க அரசு: ஸ்டாலின் குற்றச்சாட்டு!

  Newstm Desk   | Last Modified : 17 Oct, 2018 10:10 am
mk-stalin-condemned-admk-govt

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் எப்படி ஊழல் செய்யலாம் என்பதில் தான் அ.தி.மு.க அரசு குறியாக இருக்கிறது என எதிர்கட்சித்தலைவரும், தி.மு.க தலைவருமான ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று கொளத்தூர் தொகுதியில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த சிறுவன் ரிஸ்வான் இல்லத்துக்குச் சென்று, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும்,  சிறுவனின் குடும்பத்தினருக்கு நிவாரண இழப்பீடும் வழங்கினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், "ன்றைக்கு தமிழகம் முழுவதும் பரவி வரும் டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சலால், நூற்றுக்கணக்கான குழந்தைகள், சிறுவர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும், கொளத்தூர் தொகுதியைச் சார்ந்த 13 வயது சிறுவன் ரிஸ்வான் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் என வருத்தத்துடன் தெரிவித்தார். 

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,  துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் இருப்பதை ஏற்கனவே ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளிடம் ''டெங்கு காய்ச்சல் என்று சொல்லக்கூடாது'' என்று கூறி வருவதாக மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். டெங்கு காய்ச்சல் என்று சான்றிதழ் பெறுவதற்கு கூட அரசு மருத்துவமனையில் இருக்கக்கூடிய மருத்துவர்கள் மறுத்து வருகிறார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார். 

மேலும், தமிழக அரசு இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் எங்கு ஊழல் செய்யலாம்? எங்கு கொள்ளையடிக்கலாம்? எங்கு கமிஷன் வாங்கலாம்? என்கிற அந்த நிலையிலே தான் இன்றைக்கு இந்த ஆட்சி இருந்து கொண்டிருக்கிறது எனவும்ட, குட்கா புகழ் விஜயபாஸ்கர் மீது நடைபெற்றுக் கொண்டிருக்கும் சி.பி.ஐ. விசாரணையே  இதற்கு ஒரு உதாரணம் என மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். 

இனியாவது டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் தமிழகத்தில் பரவாமல் தடுக்க அதற்குரிய நடவடிக்கைகளை அரசு  மேற்கொள்ள வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close