சிசிடிவி காட்சி மூலம் பிடிப்பட்ட செல்போன் திருடர்கள்!

  Newstm Desk   | Last Modified : 17 Oct, 2018 12:27 pm
three-held-for-phone-snatching-near-valasaravakkam

சென்னை வளசரவாக்கத்தில் கடந்த 14 ஆம் தேதி வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த முதியவரிடம் முகவரி கேட்பது போல் நடித்து  சட்டை பையில் இருந்த செல்போனை பறித்து சென்ற மூவரை கைது செய்து அவர்களிடம் இருந்து அலைபேசி மற்றும் இருசக்கர மோட்டார் வாகனத்தை வளசரவாக்கம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சென்னை கோயம்பேடு அருகே நெற்குன்றம் புவனேஸ்வரி நகர் 2 வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் ஜெயபாண்டியன். கருப்பட்டி பனைவெல்லம் ஆகியவற்றை தயார் செய்து விற்பனை செய்து வருகிறார். இவர் கடந்த 14 ஆம் தேதி மதியம் 2 மணியளவில் தொழில் நிமித்தமாக வளசரவாக்கம் மெஜஸ்டிக் காலனி பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத நபர்கள் மூன்று பேர்  இருசக்கர வாகனத்தில் வந்து முகவரி கேட்பது போல் ஜெயபாண்டியன் வைத்திருந்த நவீன அலைபேசியை பறித்துவிட்டு தப்பியோட முயன்றுள்ளனர். அப்போது ஜெயபாண்டியன் செய்வது அறியாது அவர்களது வாகனத்தை பிடித்து உள்ளார், அவர்கள் விரைந்து வாகனத்தை செலுத்தவே சுமார் 200 அடி  தூரம் வரை அவர் இழுத்து செல்லப்பட்டதால் அவரது கை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து அவர் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட காவல்திறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலம் அந்த வாகனத்தின் பதிவு எண்ணையும் குற்றவாளிகளின் முகத்தையும் அடையாளம் கண்டறிந்து,  அதன்மூலம் விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து, விருகம்பாக்கத்தை சேர்ந்த சக்திவேல், சிவா, மற்றும் இவர்களது நண்பர் 12 ஆம் வகுப்பு மாணவன் உள்ளிட்ட 3 பேரை வளசரவாக்கம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து அலைபேசி மற்றும் இருசக்கர மோட்டார் வாகனம் முதலியவற்றை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் இவர்கள் வேறு பல திருட்டு வழக்குகளிலும் சம்மந்தப்பட்டுள்ளனரா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர்களிடம் தொடர்ந்து விசார்ணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close