அக்டோபர் 26 முதல் வடகிழக்கு பருவ மழை தொடங்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

  Newstm Desk   | Last Modified : 21 Oct, 2018 06:59 pm
north-east-monsoon-from-october-26-chennai-met-dept

வரும் 26ம் தேதி முதல் வடக்கிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழ்நிலை இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தென்மேற்கு பருவமழை காலம் முடிந்து விட்டது. இனி வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ளது.

வருகிற 26ம் தேதி வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு சாதகமான சூழ்நிலை நிலவுகிறது.வடக்கு அந்தமானில் ஒரு காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி உள்ளது. மேலும் அது நகரும் திசையை பொறுத்து மழை பொழிவும், அளவும் இருக்கும்.

தற்போது தென்மேற்கு வங்க கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகம் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். ஒருசில இடங்களில் கன மழைக்கும் வாய்ப்பு உண்டு. சென்னையை பொறுத்த வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் மழையை பெய்யும் என எதிர்பார்க்கலாம்" என்றார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close