சென்னையில் டெங்கு காய்ச்சலால் இரட்டைக்குழந்தைகள் உயிரிழப்பு!

  Newstm Desk   | Last Modified : 22 Oct, 2018 11:36 am
2-children-dead-for-dengue-at-chennai

தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் பன்றிக் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு இரட்டைக் குழந்தைகள் பலியாகியுள்ளது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென் மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக மழை வெளுத்து வாங்குகிறது. சென்னையிலும் கடந்த வாரம் சில நாட்கள் மழை பெய்தது. வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் பலர் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. சென்னையில் மட்டும் 50க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால்  பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சென்னையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இரட்டைக்குழந்தைகள் இன்று உயிரிழந்துள்ளனர். மாதவரத்தைச் சேர்ந்த 7 வயது தீக்ஷாவும், தர்ஷன் ஆகிய இருவரும் இரட்டைக்குழந்தைகள். இவர்கள் காய்ச்சல் காரணமாக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர்கள் இருவரும் இன்று காலை உயிரிழந்ததாக தெரிவிக்கப்ட்டுள்ளது. ஆனால் டெங்குவினால் தான் இருவரும் இறந்துள்ளனர் என மருத்துவமனை தரப்பில் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. 

முன்னதாக நேற்று பன்றிக் காய்ச்சலுக்கு நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் தெரசா என்ற ஓய்வு பெற்ற ஆசிரியை உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், மதுரையில் ராஜாஜி அரசு மருத்துவமனையில் பன்றிகாய்ச்சலால் இருவர் உயிரிழந்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close