டெங்கு, பன்றிக்காய்ச்சல் குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம்: சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன்

  Newstm Desk   | Last Modified : 22 Oct, 2018 12:17 pm
do-not-fear-health-department-secretary-radhakrishnan-explains-about-dengue-fever

தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சலால் ஒரு நாளைக்கு 20 முத்த 40 பேர் வரை பாதிக்கப்படுவதாகவும், இதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் பன்றிக் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு இரட்டைக் குழந்தைகள் பலியாகியுள்ளது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து சுகாதாரத்துறை செயலர் ராதா கிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் திருநெல்வேலி, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட பெரு நகரங்களில் தான் இவ்விதமான காய்ச்சல் ஏற்படுவதாகவும், தொடர்ந்து தலைவலி, உடல் சோர்வு, வாந்தி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும், தேங்காய் ஓடுகளில் நீர் தேங்கினால் உடனடியாக அகற்ற வேண்டும், தண்ணீர் தொட்டிகளை மூடி வைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். 

தமிழகத்தில் பரவும் டெங்கு காய்ச்சல், பன்றிக்காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தமிழகம் முழுவதும் 2,900 மருத்துவமனைகளில் பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களின் முக்கிய இடங்களிலும், சென்னை மயிலாப்பூர், கொரட்டூர் ஏரிப்பகுதி, வட சென்னைப் பகுதிகளில் அதிக முக்கியத்துவம் கொடுத்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் இதுகுறித்து பீதியடைய வேண்டாம் எனவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close