ஆண்கள் #wetoo ஆரம்பித்தால் என்னவாகும் தெரியுமா? பிரேமலதா எச்சரிக்கை!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 22 Oct, 2018 03:53 pm

what-if-men-start-wetoo-premalatha-alert

பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் #wetoo ஆரம்பித்தால் நிலைமை என்னவாகும் தெரியுமா? என விஜயகாந்த்தின் மனைவியும், தே.மு.தி.க பொருளாளருமான பிரேமலதா எச்சரித்துள்ளார். 

’மீ டூ’ ஹேஷ் டேக்கில் சிக்கி வரும் பிரபலங்களின் எண்ணிக்கை  நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பாடகி சின்மயி  வைரமுத்து மூலம் பற்ற வைத்த நெருப்பில் நித்தம் ஒருவர் பெயர் பலியாகி வருகிறது. அர்ஜூன், சிம்பு, தியாகராஜன் என இந்த பட்டியல் இப்போது நீண்டு கொண்டே வருகிறது. இதில் சின்மயி வைரமுத்து மீது கொடுத்திருக்கும் புகார் தான் கூடுதல் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. சின்மயி வைரமுத்து பற்றி வெளிப்படையாக தெரிவித்ததை தொடர்ந்து, பலரும் வைரமுத்து தங்களுக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இதுகுறித்து தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா கருத்துத் தெரிவித்துள்ளார். ‘ மீடு ஹேஸ்டேக்கை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும். சர்ச்சைக்குரிய, அல்லது விவாதத்துக்கு உரியதாக மாற்றி வருகிறர்கள். கவனமாக செயல்பட வேண்டும். தங்களின் சுயநலத்துக்காக அதனைப் பயன்படுத்தக் கூடாது. 

ஆண்களால் பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் அதே நேரத்தில் எத்தனையோ பெண்களால் ஆண்களும் இந்த விஷயத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பெண்கள் மீ டு ஆரம்பித்து வெளியிடுவது போல பதிக்கப்பட்ட ஆண்கள் ’வீ டு’ ஆரம்பித்தால் நிலைமை என்னவாகும் தெரியுமா? ‘’ என அவர் எச்சரித்துள்ளார்.   
newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close